மேலும் செய்திகள்
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4168 days ago
கூடலூரில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை
4168 days ago
உடுமலை : மறையூர் சிங்காரவேலன் கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா, இன்றும் நாளையும் நடக்கிறது. மறையூர், அஞ்சுநாடு, முருகன் மலையில் அமைந்துள்ளது சிங்காரவேலன் கோவில். இக்கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா இன்று பிற்பகல் 12.00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது. மாலை 4.00 முதல் 6.00 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.நாளை காலை 7.30 மணிக்கு, கோயில்கடவு தென்காசிநாதன் கோவிலில் இருந்து பால் காவடி குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. 8.00 மணிக்கு, கணபதி ேஹாமம், மாலா மந்திர ேஹாமங்கள் நடக்கிறது. 11.30 மணிக்கு, பூர்ணாஹுதி, அபிேஷகம், புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடக்கிறது.
4168 days ago
4168 days ago