விழுப்புரம்: வாணியம்பாளையத்தில் 14ம் தேதி சித்திரை விழா
ADDED :4231 days ago
விழுப்புரம்: வாணியம்பாளையம் சஞ்ஜீவிராயர் கோவிலில் வரும் 14ம் தேதி சித்திரை வருட பிறப்பு விழா நடக்கிறது.விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் சஞ்ஜீவிராயர் கோவிலில் வரும் 14ம் தேதி சித்திரை வருட பிறப்பு விழா நடக்கிறது. இதனையொட்டி காலை 10 மணிக்கு மூலவர் சஞ்ஜீவிராயர், உற்சவர் சீதா சமேத ராமர் லக்ஷ்மணர் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனத்துடன் அலங்காரம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சீதா சமேத ராமர் லக்ஷ்மணர் ஆஞ்சநேயருக்கு பட்டாபிஷேகம் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.