உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபூர்வ நிகழ்ச்சி: லிங்கத்தின் மீது சூரிய ஒளி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபூர்வ நிகழ்ச்சி: லிங்கத்தின் மீது சூரிய ஒளி!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் கருவறை லிங்கத்தின் மீது, சித்திரை மாத முதல் நாளில், சூரிய ஒளி விழும். இது ஆண்டுக்கு, ஒருமுறை தான் அபூர்வ நிகழ்ச்சி நடக்கிறது. இதனை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பஞ்சாங்கம் வாசிப்பு: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்தனர். தமிழ்புத்தாண்டான ஜய வருடப்பிறப்பை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, காலை, 8 மணிக்கு, அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்க கொடி மரம் அருகே உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன், சிவாச்சாரியார்கள் ஸ்ரீஜய வருட பஞ்சாங்கம் படித்தனர். அதை தொடர்ந்து, தங்க தேரோட்டம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அண்ணாமலையாரை தரிசனம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

சித்திரை மாதப்பிறப்பை முன்னிட்டு, திருவண்ணாமலை பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஸ்வாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடந்தது. அனைத்து கோவிலிலும், பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !