திருமலை திருப்பதியில் வசந்தோற்சவம் நிறைவு விழா!
ADDED :4230 days ago
திருப்பதி: திருமலையில் கடந்த, மூன்று நாட்களாக நடைபெற்ற வசந்தோற்சவம் நேற்று நிறைவு பெற்றது.வசந்தோற்சவத்தின் நிறைவு நாளான திங்கட்கிழமை மதியம், ஏழுமலையான் கருவறைக்குள் வீற்றிருக்கும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சத்யபாமா ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர், சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ராமருக்கு, வசந்த மண்டபத்தில் மூலிகை நீரால் திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது.வசந்தோற்சவத்தை முன்னிட்டு, ரத்து செய்யப்பட்ட ஆர்ஜித சேவைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம் போல் நடைபெறும்.