விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்
ADDED :4231 days ago
விழுப்புரம்: தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் அமைந்துள்ள ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு 8ம் ஆண்டு பாலாபிஷேக உற்சவம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு 90 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.பாலாபிஷேகத்தை அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு சுவாமிகள் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பக்தர்கள் பலர் பால் மற்றும் பன்னீர் வழங்கியதோடு, சிலையிலிருந்து வரும் பாலை வாட்டர் பாட்டில் மற்றும் பாத்திரங்களில் பிடித்து தங்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.சிலை நிறுவனர் தனுசு, நிர்வாகிகள் ராஜாமணி, ஜெயராமன், பத்மநாபன், அறங்காவலர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.