விழுப்புரம்: அமிர்த கணபதி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா
ADDED :4231 days ago
விழுப்புரம்: வழுதரெட்டி பகுதியில் அமிர்த கணபதி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வள்ளி திருக்கல்யாண வைபவம், இரவு 7:00 மணிக்கு வள்ளி, தேவசேனா உடனுறை சுப்ரமணிய சுவாமி திருமணக்கோல வீதியுலா
நடந்தது.சுவாமி வீதியுலாவை அறங்காவலர் குழு தலைவர் சுப்ரமணியன், எம்.பி., ஆனந்தன் துவக்கி வைத்தனர். ஆலய நிர்வாகிகள் தயாளன், பழனி, ஜெயபால், மகாலிங்கம், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, வையாபுரி உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து @நற்று காலை 8:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இன்று (15ம் தேதி) காலை 10:30 மணிக்கு துர்கை அம்மனுக்கு 108 லிட்டர் பாலபிஷேகம் நடக்கிறது.