சிறுகடம்பூரில் தமிழ் புத்தாண்டு பூஜை
ADDED :4538 days ago
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர்.செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் நேற்று முன்தினம் பங்குனி உத்திர விழா நடந்தது. சிறப்பு ஹோமம் செய்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும், சுப்பிரமணியருக்கு சந்தன காப்பு அலங்காரமும் செய்தனர். பூஜைகளை திருமுருகன் அர்ச்சகர் செய்தார். இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.