தந்தி மாரியம்மன் கோவில் பூ குண்டம்
ADDED :4236 days ago
குன்னூர் : குன்னூர் தந்தி மாரியம்மன் பூகுண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கினர்.குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 40வது பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் துவங்கிய அம்மன் ஊர்வலம், இரவு 6:30 மணியளவில் சுப்ரமணியர் சுவாமி கோவில் வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக பூகுண்டம் இறங்கினர். இதில், பலரும் கைக்குழந்தைகளை சுமந்தபடி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு மறு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது. முக்கிய தேர்த்திருவிழா இன்று பகல் 12:00 மணிக்கு நடக்கிறது.