ஏமப்பேர் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்!
ADDED :4236 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. வள்ளி தெய்வாணை சமேத முருகன் சிலைகளை வைத்து மாலை 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏமப்பேர் கோவிலில் இருந்து துவங்கிய திருத்தேர் உற்சவம் கிழக்கு தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு வழியாக சென்று மாலை 6:00 மணிக்கு நிலைக்கு வந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்களுடன் வார்டு கவுன்சிலர்கள் ராஜா, முருகன், கோவில் அர்ச்சகர் கோவிந்தன், வேலு, கிருஷ்ணன், கணேசன் செய்திருந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.