உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் மகாவீர் ஜெயந்தி அன்னதானம்

திருக்கோவிலூரில் மகாவீர் ஜெயந்தி அன்னதானம்

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் ஜெயின் சங்கம் சார்பில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப் பட்டது.திருக்கோவிலூர் ஜெயின் சங்கம் சார்பில் மார்க்கெட் வீதியில் உள்ள ஜெயின் சமுதாயக் கூடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நாள் முழுவதுமான அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டது.ஜெயின் சங்க நிர்வாகிகள் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். சிறுவர்கள் இல்லத்திற்கும் அன்ன தானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அமைப்பினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !