ஐயனார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4236 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் ஐயனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணியளவில் கோபூஜை, தபோவனம் சீனிவாச அய்யர் தலைமையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. காலை 10:00 மணியளவில் ராஜ கோபுரம் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி., ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்பெக்டர் வரதராஜன், சிறப்பு சப்-இன்பெக்டர்கள் இளங்கோவன், ரவிச்சந்திரன், செல்வகுமார் செய்தனர்.