பூண்டி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :4236 days ago
பேரூர்: தமிழ்புத்தாண்டான சித்திரை முதல் நாளன்றே சித்ரா பவுர்ணமி வருவது மிகவும் சிறப்பு. இந்தாண்டு இரண்டும் ஒரே நாளில் வருவதால் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க கடந்த ஒரு வாரமாகவே ஏராளமான பக்தர்கள் காவடி, கரகம் எடுத்து பாதயாத்திரையாக வரத்துவங்கினர். மூங்கில் குச்சி உதவியுடன் செங்குத்தாக உள்ள மலையை கடந்து ஏழாவது மலையிலுள்ள பஞ்சலிங்கத்தை நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் தரிசித்தனர்.