சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் திருப்படி பூஜை
ADDED :4236 days ago
கும்பகோணம் ; தஞ்சை மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி திருப்படி பூஜை நேற்று நடைபெற்றது.
இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு தங்ககவசம், வைரவேல், வைரகிரீடம் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் 60 திருப்படிகளுக்கு குத்துவிளக்கேற்றி திருப்படி பூஜை நடைபெற்றன.