கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4233 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரமும், வழிபாடும் நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெண்கள் 108 குத்துவிளக்கு பூஜை செய்தனர். லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது. அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி, செயல் அலுவலர் ஜெயக்குமார் மேற்பார்வையில் பூஜைகள் நடந்தது.