உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணலிப்பட்டு ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா!

மணலிப்பட்டு ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா!

திருக்கனுார்: மணலிப்பட்டு ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீபம், தெப்பல் உற்சவம் நடந்தது. திருக்கனுார் அடுத்த மண லிப்பட்டு குளக்கரையில் உள்ள விமல ஆஞ்சநேயர் கோவிலில் 14ம் ஆண்டு லட்சதீப விழா நடந்தது. இதனையொட்டி, காலை 10:00 மணிக்கு அபிஷேகமும், 11:00 மணிக்கு தீபாரaாதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு லட்சதீப காட்சியும், இரவு 7:00 மணிக்கு அருகில் உள்ள குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர்.இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா, பஜனை குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !