உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

கச்சிராயபாளையம்: தமிழ் புத்தாண்டை ஒட்டி கோமுகி அணை அருகில் உள்ள அம்மன் கோவிலில் பொதுமக்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை அருகில் உள்ள தியாகபாடி அம்மன் கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி கோவில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகளவு பக்தர்கள் வழிபட்டனர். கோமுகி அணை, கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் மக்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !