உலக நன்மைக்காக குத்துவிளக்கு பூஜை
ADDED :4231 days ago
பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தன தானியம் பெருகிட, மங்களத்திற்காகவும் நடந்த குத்துவிளக்கு பூஜையை பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தொடக்கி வைத்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திருவிளக்கு வழிபாடு நடத்தினர். விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் புகழேந்திரன், உதவி ஆணையர் கோதண்டராமன் ஆகியோர் மேற்பார்வையில், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.