லட்சுமி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :4231 days ago
உத்தமபாளையம் : உத்தமபாளையம் விகாசா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில், ஸ்ரீ வித்யா லட்சுமி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா தாளாளர் இந்திரா உதயகுமார் முன்னிலையில் நடந்தது. அர்ச்சகர் ஏகாம்பர சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். ஓய்வு டி.எஸ்.பி., சுருளிபொம்மு தொகுத்து வழங்கினார். விழாவில் கோம்பை ஜமீன்தார் அப்பாஜி ராஜ்குமார், ராமகிருஷ்ணன் சந்திரா கல்லூரி தாளாளர் ராமகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் விரியன்சுவாமி, வேதா, காந்தவாசன், சுப்பிரமணியன், பாஸ்கரன், விஜயராணி, அந்தோணிராஜ், குமரேசன், நகராட்சிகள் மண்டல பொறியாளர் ராஜேந்திரன், பங்கு தந்தை பால்ராஜ், பேரூராட்சி தலைவர்கள் ஷகிலா பானு, சீனிவாசன், விவசாய சங்க தலைவர் அப்பாஸ், அரிமா சங்க தலைவர் சிவாஜிமோகன் உட் பட பலர் பங்கேற்றனர்.