உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் கோவிலில் சித்திரை கனி!

குன்னூர் கோவிலில் சித்திரை கனி!

குன்னூர் : குன்னூர் அருகே பெரிய வண்டிச்சோலை பகுதியில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் சித்திரை கனி திருவிழா நடந்தது. காலை 6:00 மணிக்கு நிர்மால்ய தரிசனத்துடன் துவங்கிய விழாவில் அஷ்ட திரவிய மகா கணபதி ஆவாகனம், அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அனைத்து உலக நன்மைக்காக மகா சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து வேதபாராயணம், சமூக அர்ச்சனை, உச்சிபூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தன. குன்னூர், கோத்தகிரி மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சித்திரை கனி திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !