தஞ்சை பிரச்சன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!
ADDED :4230 days ago
தஞ்சாவூர்: நாலுகால் மண்டபம் ஸ்ரீ பிரச்சன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் முன் உள்ள பெரிய கொடி மரத்தில் பட்டாச்சாரியார்கள் கருடான்கொடியை ஏற்றி வைத்தனர். விழாவில் கொடியற்றத்தின் போது அலர்மேல்மங்கா, பத்மாவதி சமேத ஸ்ரீ பிரச்சன்ன வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.