திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் புதையல் கடத்தல்?
ADDED :4231 days ago
புதுடில்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் பல கடத்தப்பட்டுள்ளதாகவும், சில நகைகள் எடுக்கப்பட்டு அதற்கு பதில் போலி நகைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயிலின் ரகசிய அறையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் ஆய்வு நடத்தி வரும் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் தாக்கல் செய்த அறிக்கையில், கோயிலின் சொத்துக்கள் முறையாக தணிக்கை செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.