உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோட்டார் பைக்கிற்கு கோவில்: நிறுத்தாமல் போனால் விபத்து நிச்சயமாம்!

மோட்டார் பைக்கிற்கு கோவில்: நிறுத்தாமல் போனால் விபத்து நிச்சயமாம்!

ஜோத்பூர் : ராஜஸ்தானின், ஜோத்பூர் நகரில், பழைய, புல்லட் மோட்டார் பைக்கை, கடவுளாக வழிபடும் விசித்திர நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த பைக்கிற்காக, அங்கு கோவில் கட்டப்பட்டு உள்ளது.

பயபக்தியுடன் வழிபட்டு...:பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலத்தின், ஜோத்பூர் நகரில், ஓம் பன்னாஸ் புல்லட் மந்திர் என்ற கோவில் மிகவும் பிரபலம். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இந்த கோவில் வழியாக சென்றால், உதறல் எடுத்து விடும். இருசக்கர வாகனத்தில் செல்லும், ஒவ்வொருவரும், கண்டிப்பாக, இந்த கோவிலுக்கு முன் வண்டியை நிறுத்தி, அங்கிருக்கும் புல்லட் கடவுளை, பயபக்தியுடன் வழிபட்டு, பிரசாதம் பெற்றுச் செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர்.அப்படி, பைக்கை நிறுத்தாவிட்டால், போகும் வழியில், விபத்தை சந்திக்க நேரிடும் என்ற நம்பிக்கை, இந்த பகுதி மக்களிடையே நிலவுகிறது. பூனம் என்ற பெண் தான், இந்த கோவிலின் பூசாரியாக உள்ளார்.

விசித்திர நம்பிக்கை குறித்து, அவர் கூறியதாவது:இது, ரொம்ப சுவாரசியமான சம்பவம். 25 ஆண்டுகளுக்கு முன், இந்த வழியாக, ஓம் சிங் ரத்தோர் என்பவர், புல்லட் பைக்கில் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவர் ஓட்டிச் சென்ற பைக்கை, போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். அடுத்த நாள், அந்த பைக், விபத்து நடந்த இடத்தில் கிடந்தது.பீதியை ஏற்படுத்தியதுஇதைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்த போலீசார், மீண்டும் அந்த பைக்கை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அடுத்த நாளும் அந்த பைக், விபத்து நடந்த இடத்திலேயே கிடந்தது. இது, அந்த பகுதி மக்களிடையே, பீதியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.இதனால், விபத்து நடந்த இடத்திலேயே, அந்த புல்லட் பைக்கை வைத்து, வழிபடத் துவங்கினர்.நாளடைவில், அந்த பைக்கிற்காக கோவிலும் கட்டப்பட்டது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக, இங்கு வண்டியை நிறுத்தி வழிபாடு நடத்துகின்றனர். புல்லட் கடவுளுக்கு, மதுபானங்களை படைத்து வழிபடும் சடங்கும் பின்பற்றப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !