உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சித்தி வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சூலுார் : சின்னியம்பாளையம் சித்தி வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சின்னியம்பாளையம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத கணபதீஸ்வரர் கோவிலில், வேல்முருகன், அய்யப்பன், சித்தி வினாயகருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல், தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யும் வகையில் திருப்பணிகள் நடந்தன. பணிகள் நிறைவடைந்து, புனருத்தாரண கும்பாபிஷேக விழா, கடந்த 14ம்தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நான்கு கால ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை 6.15 மணிக்கு விமான கலசங்களுக்கும், காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் சித்தி வினாயகர், ஐயப்பன், வேல்முருகன், மங்களாம்பிகை மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !