உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொழுமம் கோவில் திருவிழா: குடிநீர் வசதி செய்து தரப்படுமா?

கொழுமம் கோவில் திருவிழா: குடிநீர் வசதி செய்து தரப்படுமா?

மடத்துக்குளம் : கொழுமத்தில் மாரியம்மன் திருவிழா தொடங்குவதால் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் பகுதியில் காரத்தொழுவு, கடத்துார், கொழுமம் ஆகிய கிராமங்கள் உட்பட பல கிராமங்களில் கோடைகாலங்களில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடக்கும். இந்த திருவிழாவுக்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து இந்த பகுதிக்கு வந்து தங்குவர். இந்த நாட்களில் வழக்கமானதை விட மூன்று மடங்கு குடிநீர் தேவை ஏற்படும். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போதே குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கொழுமத்தில் திருவிழா நாட்களில் இந்த தேவை அதிகரிப்பதோடு, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். பல ஆயிரக்கணக்கான மக்கள் வரும் இந்த திருவிழா நாட்களில், முக்கிய இடங்கள் மற்றும் கோவில் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !