பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம்!
ADDED :4229 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு நேற்று சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலை பஞ்சவடியில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. மூலநட்சத்திர தினத்தையொட்டி, நேற்று ஆஞ்ஜநேயருக்கு பால் மற்றும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. பின்னர், மூலவர் ஆஞ்ஜநேயர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி சுந்தரவரதன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.