உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி சிறப்புத் தொழுகை!

மழை வேண்டி சிறப்புத் தொழுகை!

இளையான்குடி : இளையான்குடியில் உள்ள சமுத்திரம் ஊரணியில் எப்போதும் தண்ணீர் இருக்கும். அந்த ஊரணி தண்ணீரை மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர் . கடந்த ஆண்டு கோடையில் கூட ஊரணியில் தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் ஊரணி காய்ந்து கிடக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் , ஆழ்துளைக்குழாய் கிணறுகள் பல ஊற்று இன்றி நின்று விட்டது. காவிரி கூட்டுக் குடிநீரையும் , லாரிகளில் கொண்டு வந்து விற்கப்படும் தண்ணீரையும் நம்பி மக்கள் உள்ளனர் . இதையடுத்து இளையான்குடியில் உள்ள அனைத்து ஜமாத்தையும் சேர்ந்த முஸ்லிம்கள், சமுத்திரம் ஊரணியில் , நேற்று காலை 9.50 மணிக்கு மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர் . ஏற்பாடுகளை உதயம் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

* காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். அண்ணாநகர் இமாம் ரஹ்மத்துல்லா தொழுகை நடத்தினார். முத்துப்பட்டணம் அப்துல் கரீம் துவா ஓதினார். இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத்தினர், அண்ணாநகர், என்.ஜி.ஓ., காலனி, முத்துப்பட்டணம், காட்டுதலைவாசல், செஞ்சை, அலியார்புரம், காலேஜ் பள்ளி ஜமாத்தார்கள் பங்கேற்றனர். இதே போல்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், காட்டு தலைவாசல், தவ்ஹீத் பள்ளிவாசலில் இமாம் அமீன் தலைமையில் தொழுகை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !