சித்பவானந்தர் ஜெயந்தி விழா
சின்னமனூர் : சின்னமனூர் சிவபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாஸ்ரமத்தில், சுவாமி சித்பவானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. திருக்குற்றாலம் விவேகானந்த ஆஸ்ரம தலைவர் சுவாமி அகிலானந்த மகராஜ் தலைமை வகித்தார். தெய்வீக பேரவை உறுப்பினர் புகழேந்தி வரவேற்றார். முதல் நிகழ்ச்சியாக தெய்வீக பேரவையின் பஜனை நடந்தது. விழாவில், சிவபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாஸ்ரம தலைவர் முக்தானந்த மகராஜ், திண்டுக்கல் ஆஸ்ரம தலைவர் நித்யசத்துவானந்த மகராஜ், தஞ்சாவூர் ஆஸ்ரம தலைவர் கிருஷ்ணானந்த மகராஜ், சிவபுரம் ஆஸ்ரம செயலாளர் சதாசிவானந்த மகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி ஓய்வு பேராசிரியர் சுந்தரராஜ் சொற்பொழிவாற்றினார். ஓடைப்பட்டி ஸ்ரீ ராம் நர்சரி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பரிசுகள் வழங்கப்பட்டது. தெய்வீக பேரவை செயலாளர் சின்னச்சாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆஸ்ரம தலைவர் முக்தானந்த மகராஜ் செய்திருந்தார்.