மாரியம்மன் கோவில் திருவிழா இன்று துவக்கம்!
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடக்கிறது. மடத்துக்குளம் பகுதியில் கோடை காலங்களில் திருவிழாக்கள் நடப்பது பாரம்பரியமாக உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் முக்கிய கோவில்களின் பட்டியலில் உள்ளது கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில். இக்கோவில் திருவிழா இன்று (22ம் தேதி) தொடங்கி மே 14 வரை தொடர்ந்து நடக்கிறது. இதில் இன்று காலை 8.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சுத்தி புண்ணியாவாசனம், காலை 8.30 மணிக்கு திருக்கம்பம் வெட்ட புறப்படுதல், இரவு 8.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் அபிேஷகம், கோவிலில் விசேஷ பூஜைநடத்தி அமராவதி ஆற்றுக்கு புறப்படுதல், இரவு 11.00 மணிக்கு திருக்கம்பம் நடுதல் நடக்கிறது. வரும் 23ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை தினசரி ஐந்துகால பூஜைகளும், அபிேஷக ஆராதனைகளும், விசேஷ அலங்காரங்களும் நடைபெறும், அடுத்த மாதம் 8ம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு திருக்கம்பம் அமராவதி நதியில் சேர்தல், சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி புறப்பாடு, 9ம் தேதி காலை 8.30 மணிக்கு பொதுமண்டகப்படி மே 10 முதல் 13 வரை மண்டகப்படிகள், மே.14ம் தேதி மாலை 6.00 மணிக்கு மகாபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.