இலவச சமஸ்கிருத பயிற்சி வரும் 28ம் தேதி துவக்கம்!
ADDED :4226 days ago
புதுச்சேரி: புதுச்சேரியில் சமஸ்கிருத பாரதி சார்பில், இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 28ம் தேதி துவங்குகிறது. பாரத ஒருமைப்பாடு, பண்பாடு, கலாசாரம், மனிதநேயம் ஆகியவற்றின் பாரம்பரியமாக சமஸ்கிருத மொழி விளங்குகிறது. இம்மொழியை அடிப்படை பேச்சு வழக்கில் கற்பதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 28ம் தேதி முதல் மே மாதம் 7ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் 9வது கிராஸ் மனமகிழ் மன்றத்தில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 வரை பயிற்சி நடத்தப்படுகிறது. 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், 94861 02720, 94436 13899 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.