சிறுபாக்கம் பெரியாண்டவர் கோவிலில் அமுதுபடையல் விழா!
ADDED :4229 days ago
சிறுபாக்கம்; சிறுபாக்கம் பெரியாண்டவர் கோவிலில் அமுது படையல் விழா நடந்தது.
சிறுபாக்கம் செங்குந்தர் மட வளாகத்தில் உள்ள பெரியாண்டவர் கோவில் அமுதுபடையல் விழா, கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறுதொண்ட நாயனாரின் நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மாலை அமுதுபடையல் விழாவை யொட்டி, அலங்கரித்த வாகனத்தில் பிச்சாண்டவர் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு அமுதுபடையல் விழா நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செங்குந்தர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.