பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மழைவேண்டி சிறப்பு வேள்வி!
ADDED :4184 days ago
பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மழைவேண்டி நேற்று சிறப்பு வேள்வி நடந்தது. இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவுப்படி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மழைவேண்டி சிறப்பு வேள்வி நேற்று காலை 7.00 மணிக்கு துவங்கியது. அப்போது,கோவிலில் கொடிமரம் அருகேயுள்ள நந்திபெருமானுக்கு, தண்ணீர் நிரப்பி வாசனை புஷ்பங்கள் மற்றும் திரவியங்கள் போடப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் ஓதுவார் ஞானமூர்த்தி தலைமையில் ஓதுவார்கள் பக்கவாத்தியங்களுடன் மழைப்பதிகங்கள் பாடினர். தொடர்ந்து, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு கலசங்கள் வைத்து புனிதநீர் ஊற்றி, வருணஜெபம், ருத்ரஜெபம் முதலான யாகம் செய்து பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு 16வகை திரவியங்களால் கலச தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர்.