மழை வேண்டி மருந்தீசுவரர் கோவிலில் வருண ஜபம்!
திருவான்மியூர் : மருந்தீசுவரர் கோவிலில், மழை வேண்டி, சித்திரை குளத்தில் வருண ஜபமும், மழைக்கான ராகங்களும், இசைக் கருவியில் வாசிக்கப்பட்டன.திருவான்மியூர், மருந்தீசுவர் கோவிலில் மழை வேண்டி, நேற்று காலை, சித்திரை குளத்தில் வருண ஜபம் நடந்தது. அதை முன்னிட்டு, அதிகாலை 6:௦௦ மணிக்கு, ராமநாதீசுவரருக்கு, 108 குட தீர்த்த அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, நவ கலச ஸ்தாபனம், ருத்ர ஜப பாராயணம், வருண காயத்திரி ஜபம், மழை வேண்டி திருமுறை பாராயணம், ஓதுவார்களை கொண்டு, மேகராகக் குறிஞ்சி பண் ஆகியவை நடந்தன. பின், நாதஸ்வரம், வயலின் ஆகிய இசைக் கருவிகளை கொண்டு மேகவர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி ராகங்கள் வாசிக்கப்பட்டன. காலை 7:௦௦ மணிக்கு, மருந்தீசுவரருக்கு சீத குடும்ப தாராபாத்திர அபிஷேகம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தன.காலை 8:௦௦ மணிக்கு, ஸ்ரீ ருத்திரசமக பாராயணத்துடன், மகா அபிஷேகமும் நடந்தது. காலை 8:15 மணிக்கு, கடம் புறப்பாடும் அதை தொடர்ந்து, மருந்தீசுவரருக்கு கடஅபிஷேகமும் நடந்தன.