பாகம்பிரியாள் கோயிலில் மே 7ல் திருக்கல்யாணம்!
ADDED :4183 days ago
திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா, மே 3ம் தேதி, காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 7ம் தேதி திருக்கல்யாணம், 9ம் தேதி தேரோட்டம், 10ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மற்றும், கிராமத்தினர் செய்து வருகின்றனர்.