வடவெட்டி அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா
ADDED :4178 days ago
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே வடவெட்டி அங்காள பரமேஸ் வரியம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராத னையும் நடைபெற்றது. மாலை அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங் கரித்து கோவில் முன்பு உள்ள மேடையில் உள்ள ஊஞ்சலில் வைத்து ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. விரதம் இருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மஞ்சள் உடையணிந்து அருகில் உள்ள குளத்தில் இருந்து கரகம் ஜோடித்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்த னர். இரவு குபேர, கும்ப பூஜை, ஆராதனை நடந் தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.