சோழவந்தான் வைகை ஆற்றில் மே 14 ல் அழகர் இறங்குகிறார்
ADDED :4182 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகைநாராயணபெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்ராபவுர்ணமி மே 14 புதன்கிழமை காலை 4 மணிக்கு பெருமாள் வெண்குதிரை வாகனத்தில் அழகர் திருக்கோலத்தில் 75 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார், பின்னர் காலை 9.20 மணிக்கு வைகை ஆற்றில் இறங்குகிறார். மறுநாள் மே 15 ல் அழகரின் தசவாதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. வைகை ஆற்றில் இருந்து கருட வாகனத்தில் புறப்பட்ட அழகர் சுவாமி நகர் அக்ரஹாரம் சந்தானகோபாலகிருஷ்ணன் கோயில் அரங்கில் எழுந்தருளி, இரவு 9 மணிக்கு தசாவதாரம் நடக்கிறது.மே 16 ல் வைகை ஆற்றில் அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி, கோயில் சென்றடையுதல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திகுமார், ஆலயஊழியர் பூபதி செய்துள்ளனர்.