உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க 24 மணி நேரம்

திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க 24 மணி நேரம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள்  24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்
நிலை ஏற்பட்டது.கோடை விடுமுறை என்பதால் திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க  பக்தர்கள் அதிகளவில் வர துவங்கியுள்ளனர். பக்தர்கள் கூட்டம்  திருமலையில் அதிகரித்துள்ளது.  நேற்றும் இன்றும் 24 மணி நேரம் வரை ஏழுமலையான தரிசிக்க காத்திருந்தனர்.நேற்று மாலை (வெள்ளிக்கிழமை ) நிலவரப்படி தர்ம தரிசனத்திற்கு பக்தர்கள், 31 காத்திருப்பு அறைகளை கடந்து 2 கி.மீ. தொலைவிலும், பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 15 காத்திருப்பு அறைகளை  கடந்து  1 கி.மீ. தொலைவிலும்  ஏழுமலையான தரிசிக்க காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !