உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணியனூர் மகா காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மணியனூர் மகா காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

சேலம்: சேலம், மணியனூர் மகா காளியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. சேலம், மணியனூர் மகா காளியம்மன் கோவில் விழா, கடந்த, 29ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும், அம்மனுக்கு பல்வேறு விதமான அலங்காரங்கள், பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று இரவு, நூற்றுக்கணக்கான பெண்கள், திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். 6ம் தேதி காலை, 9 மணிக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி காலை, 9 மணிக்கு சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8ம் தேதி மாலை, 5 மணிக்கு குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. 9ம் தேதி இரவு, 9 மணிக்கு வெள்ளி, நகை, கொலசு உற்பத்தியாளர்கள் சார்பில், சத்தாபரணம் ஊர்வலம் நடக்கிறது. வரும், 13ம் தேதி இரவு, 8 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !