உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டுவெடிப்பு எதிரொலி: ராமேஸ்வரம் கோயிலில் மொபைல் டவர்!

குண்டுவெடிப்பு எதிரொலி: ராமேஸ்வரம் கோயிலில் மொபைல் டவர்!

ராமேஸ்வரம்: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு எதிரொலியாக, ராமேஸ்வரம் கோயிலில் மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் ஊழியர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, ஏற்கனவே பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு ரதவீதிகளில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டுவெடிப்பை அடுத்து, ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள், ஊழியர்கள் கொண்டு செல்லும் மொபைல்போன் இணைப்பை துண்டிக்க ஜாமர் கருவி பொருத்தப்பட உள்ளது. கோயிலுக்குள் இருந்து தகவல் பரிமாற, கோயில் ஊழியர்களுக்கு வாக்கி டாக்கி வழங்க, மாநில உளவுதுறையினர் உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று கோயில் அலுவலக வளாகத்திற்குள், வாக்கி டாக்கி பயன்பாட்டிற்கான, மொபைல் டவர் பொருத்தப்பட்டது. இதன் மூலம், கோயிலுக்குள் மொபைல்போன் மூலம் குண்டு வெடிக்க செய்வதையும், தேவையற்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என, கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !