நித்தீஸ்வரர் கோயிலில் சங்கர ஜெயந்தி விழா!
ADDED :4531 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோயிலில் சங்கர ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் உள்ள பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடந்தது. பின்னர் ஆதி சங்கரர் பட வீதியுலா நடந்தது. தொடர்ந்து மதியம் அன்னதானம் மற்றும் சங்கர பஜனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஜனகல்யாண் மற்றும் ரவிசுந்தர்,ஜெய்சங்கர் குருக்கள் செய்திருந்தனர்.