உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகாளிபுரத்தில் கன்னிமாரம்மன் திருவிழா!

கன்னிகாளிபுரத்தில் கன்னிமாரம்மன் திருவிழா!

கூடலூர் : கூடலூர் கன்னிகாளிபுரத்தில் உள்ள, கன்னிமாரம்மன் கோயில் திருவிழா நடந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். அதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்து, பொதுமக்களுக்கு வழங்கினர். மழை பெய்ய வேண்டி, சிறப்பு வழிபாடு நடத்தினர். மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கரகம் எடுத்தனர். நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளுடன், பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இளைஞர் அணி சார்பில் விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !