முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4176 days ago
பட்டிவீரன்பட்டி : ஒட்டுபட்டியில் விநாயகர், பகவதி அம்மன், காளியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, தீப ஆராதனை நடந்தன. ராமேஸ்வரம், கங்கை, காவிரி ஆகிய புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு நேற்று காலை கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி சிவகுரு சாமிகள் பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். முன்னாள் அமைச்சர் பெரியசாமி, சித்தரேவு ஊராட்சி தலைவர் ஜெயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் அன்னதானம் நடந்தது. சென்னைவாழ் பொதுமக்கள் சார்பில் பட்டிமன்றம் நடந்தது.