மகா சாத்தையனார் கோயில் வடம் பிடித்தல் திருவிழா!
ADDED :4222 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மகா சாத்தையனார் கோயில், எருதுகட்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று கோயிலில் இருந்து வடத்தை பக்தர்கள் ஊர்வலமாக தூக்கிசென்று, ஊர் மையத்தில் உள்ள அரசமரத்தில் வைத்து வழிபட்டனர். சாத்தனூர், சீவலாதி, வாணியக்குடி, பூலாங்குடி, பஞ்சனூர், புதுக்கோட்டை, ஆர்.எஸ்.மங்கலம், உள்ளிட்ட சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.