உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஸ்ரீபட்டாபிஷேக ராமர் சைத்ரோத்ஸவத் விழா

திருப்புல்லாணி ஸ்ரீபட்டாபிஷேக ராமர் சைத்ரோத்ஸவத் விழா

ராமநாதபுரம்,:  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி  ஆதிஜெகன்னாதப் பெருமாள் திருக்கோயிலில்   சைத்ரோத்ஸவத் திருவிழா  நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடிக் கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.  பின்னர் பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சீதை, ஸ்ரீலெட்சுமணன் ஆகியோரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு சூரியப்பிரபை வாகனத்தில் அருள்மிகு பட்டாபிஷேகராமர் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்தார். , 15ஆம் தேதி அருள்மிகு ராமர், சீதை லெட்சுமணருடன் வானமாமலை மடத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !