உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி உற்சவம்!

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி உற்சவம்!

திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர்  கோவில்  பிரம்மோற்சவ விழாவில்  அதிகார நந்தி உற்சவம் நேற்று காலை நடந்தது. திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை  திந்திரிணீஸ்வரர்  கோவிலில்  சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 8 மணிக்கு,  அதிகார நந்தி வாகனத்தில்,  தாய்,தந்தையை வலம் வந்து விநாயக பெருமான் மாங்கனி பெற்ற அலங்காரத்தில்  வீதியுலா வந்து அருள்பாலித்தனர். 10 ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும்,  11 ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்க உள்ளது.

தேன் கூடு அழிப்பு:  திண்டிவனம் திந்திரிணீஸ்வரர்  கோவில் கோபுரத்தில் இருந்த பெரிய தேன் கூடு அழிக்கப்பட்டது. திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர்  கோவில் 90  அடி உயரமுள்ள  ராஜகோபுரத்தின் உச்சியில்  மலை தேனீக்கள்  பெரிய அளவில் கூடு கட்டியிருந்தது.  கோவிலுக்கு வரும் பக்தர்கள், அந்த பகுதி மக்கள்  இந்த தேனீக்களால்  பாதிக்கப்பட்டனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை 6.30 மணிக்கு, நிலைய அலுவலர்  ஜெயபாலன்  ( பொறுப்பு) தலைமையில்,   பழனி, விஜயகுமார்,  கனகராஜ் ஆகிய வீரர்கள்  பூச்சி மருந்தை  தண்ணீருடன் கலந்து,  மகா மண்டபத்தின் மேல் இருந்து கோபுர உச்சியில் இருந்த தேன் கூட்டின் மீது பீய்ச்சி அடித்தனர். இதில் அடுத்த சில நொடிகளிலேயே தேனீக்கள் இறந்து கீழே விழுந்தன.   மேலும் கூட்டை முழுவதுமாக அழித்தனர்.  இதனால்  பக்தர்களின் அச்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !