புதுச்சேரி முதல்வர் சேலத்தில் வழிபாடு!
ADDED :4171 days ago
புதுச்சேரி: சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில், முதல்வர் ரங்கசாமி நேற்று வழிபாடு நடத்தினார். முதல்வர் ரங்கசாமியின், ஆன்மிக குரு, அப்பா பைத்தியம் சுவாமி கோவில், சேலத்தில் அமைந்துள்ளது. அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும், முக்கியமான நிகழ்வுகளின்போதும், சேலம் சென்று சுவாமியை வழிபடுவது முதல்வர் ரங்கசாமியின் வழக்கம். லோக்சபா தேர்தல் முடிந்து, அடுத்த வாரம், ஓட்டுகள் எண்ணப்பட உள்ள சூழ்நிலையில், முதல்வர் ரங்கசாமி நேற்று காலை சேலம் புறப்பட்டு சென்றார். அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில் வழிபாடு நடத்திய அவர், நேற்று இரவே புதுச்சேரி திரும்பினார்.