வீரபாண்டியில் தேரோட்டம் பொதுமக்கள் வடம் பிடித்தனர்!
ADDED :4204 days ago
தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் நான்காம் நாள் திருவிழாவை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேர் நிலையில் இருந்து, கோயில் முன்பு உள்ள தேரோட்ட வீதிக்கு கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. அம்மன் சர்வ அலங்காரத்தில் தேரில் வீற்றிருந்தார். கலெக்டர் பழனிசாமி, எஸ்.பி., மகேஷ் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் சிறிது தூரம் இழுத்து வரப்பட்டு கோயில் அருகே நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கும். நாளை மறுநாள் மே 12ம் தேதி திங்கள் கிழமை தேர் நிலைக்கு வரும். அன்று முத்துச்சப்பரத்தில் அம்மன் திருத்தேர் வடம் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கும்.