தர்ம முனீஸ்வரர் கோயிலில் புரவி எடுப்பு விழா!
ADDED :4206 days ago
சாயல்குடி : சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில், வருடாபிஷேகம் மற்றும் புரவி எடுப்பு விழா நடந்தது. 21 வகையான அபிஷேகம் நடந்தது. பறவை காவடி, அழகுவேல் குத்துதல், அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மாலையில் சாயல்குடியிலிருந்து கூராங்கோட்டை பொது இடத்திற்கு புரவி கொண்டு சென்றனர். பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சாயல்குடி அண்ணா நகரில் வீரமல்லம்மாள் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. அம்மனுக்கு நான்கு காலை பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.