சின்னாளபட்டியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!
ADDED :4168 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. சின்னாளபட்டியில், சித்ரா பவுர்ணமி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை எட்டு மணிக்கு, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. ஒன்பது மணிக்கு விக்னேஷ்வர பூஜை,மாலை மாற்றுதல்,ஊஞ்சல் வைபவம்,உபநயனம் உள்ளிட்டவை நடந்தன. 10.30 மணிக்கு மேல்கன்னிகாதானம்,மாங்கல்ய தாரணம், மங்கள ஆரத்தியுடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதினர். சுமங்கலி பெண்கள் புதிய தாலிக்கயிறு அணிந்தனர். மாலையில் சுவாமி,அம்பாள் ஊர்வலம் நடந்தது. நிர்வாக அறங்காவலர் சுந்தரேசன் தலைமையில், ராமஅழகர் சுவாமி தேவஸ்தான நிர்வாக கமிட்டியினர், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.