உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஜென்மோற்சவ விழா!

பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஜென்மோற்சவ விழா!

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜென்மோற்சவ விழா நேற்று நடைபெற்றது. அதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. பின்பு அம்மனின் ஜென்மோற்சவத்தை கொண்டாடும் விதமாக, அம்மனை குழந்தை வடிவாக மஞ்சளால் செய்து, பெயர் சூட்டி, தாலாட்டி மகிழ்ந்தனர் பக்தர்கள். விழாவில் முழுமையாக பங்கேற்ற பகதர்களுக்கு குலுக்கல் முறையில் பூஜை செய்யப்பட்ட புடவைகள் பரிசாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !