உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) சொத்து யோகம்!

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) சொத்து யோகம்!

மன உறுதி மிக்க மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாய் 6ல் இருந்து நன்மை வழங்குகிறார். சுக்கிரன் மே 24ல் மீனத்தில் இருந்து மேஷத்திற்கு மாறி நன்மை செய்வார். சூரியன்,புதன், சனி,ராகு, கேது ஆகியோரால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. குருபகவான் உங்கள் ராசிக்கு 3ல் இருந்து தடைகள் ஏற்படுத்துவார். அவர் ஜூன்13ல் கடகத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. இதனால், மன உளைச்சல், உறவினர் வகையில் வீண் பகையை உருவாக்குவார் .  செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைவதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க யோக முண்டு. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பகைவர்கள் தொல்லை விலகும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை,
ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். சுக்கிரனால் பெண்களால் சுகம் கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்க பெறுவீர்கள். புதனால் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம்.  

தொழிலில், வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி அடைவர். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கலைஞர்களுக்கு மே 24க்கு பிறகு சிறப்பான புகழும், வருமானமும் பெறுவர். அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். மாணவர்கள் கடந்த காலம் போலமெத்தனமாக இருக்க வேண்டாம். விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். கண் வலி வரலாம்.  

நல்ல நாள்: மே 19,20,21,22,23,26,27,30,31 ஜூன்1,7,8,9,10  
கவன நாள்: மே 15,16 ஜூன் 11,12,13
அதிர்ஷ்ட எண்: 2,3                         நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். பசுவுக்கு தழை போடுங்கள். சூரியனை தரிசனம் செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !